Dwayne Rock Johnson (Actor & Ex Wrestler)

டுவெயின் டக்ளஸ் ஜான்சன் (தி ராக்) - (நடிகர்)

Dwayne Douglas Johnson (The Rock) - (Actor)

வரலாறு தமிழில் 

டுவெயின் டக்ளஸ் ஜான்சன் (மே 2, 1972 -இல் பிறந்தவர்), என்னும் இவர் அவருடைய முன்னாள் ரிங் பெயரான தி ராக் என்பதால் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் தற்போது அமெரிக்காவில் நடிகராக உள்ளார். ஓய்வுப் பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரரும் ஆவார். ஜான்சன் கல்லூரி நிலை கால்பந்து வீரராக இருந்தார். 1991 -ஆம் ஆண்டில், அவர் மியாமி பல்கலைக்கழக தேசிய சாம்பியன்ஷிப் அணியில் பங்கேற்று இருந்தார். பின்னாளில் அவர் கனடிய கால்பந்து லீகில் கேல்கரி ஸ்டாம்ப்டர்ஸ் என்ற அணிக்காக விளையாடினார், ஆனால் அந்த சீசனில் இரண்டு மாதம் விளையாட்டில் சேர்க்கப்படாமல் இருந்தார். இந்த காரணத்தால், தன்னுடைய தாத்தா பீட்டர் மைவியா மற்றும் தனது தந்தை ராக்கி ஜான்சன் ஆகியோரைப் போல தானும் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரராக மாறுவது என்ற முடிவுக்கு வந்தார்.

ஒரு மல்யுத்த வீரராக வொர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மன்ட் (World Wrestling Entertainment - WWE) -இல் மிகவும் பிரபலமானார், இந்த அமைப்பு 1996 முதல் 2004 -ஆம் ஆண்டு வரை வொர்ல்ட் ரெஸ்லிங் ஃபெடரேஷன் (World Wrestling Federation - WWF) என்றழைக்கப்பட்டது. ரெஸ்லிங் வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்றாம் தலைமுறை மல்யுத்த சூப்பர்ஸ்டார் என்ற பெருமையையும் பெற்றார். WWE -இல் ராக்கி மிக வேகமாக வளர்ச்சியடைந்தார், முதலில் "ராக்கி மைவியா" என்றும், அதன் பின்னர் "தி ராக்" என்றும் அறியப்பட்டார், இவர் நேஷன் ஆஃப் டாமினேஷன் என்ற குழுவின் உறுப்பினராக இருந்தார். WWF -இல் இவர் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், ஜான்சன் WWF சாம்பியன்ஷிப்பை வென்று, அந்த நிறுவனத்தின் மிகப் பிரபலமான வீரர்களில் ஒருவராக மாறினார். மேலும் இவர் பேட்டிகள் மற்றும் முன்னோட்டங்கள் தருவதில் பிரபலமானவர் ஆனார். 2001 -ஆம் ஆண்டில், அவர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார், சில நேரங்களில் ரிங்கிலும் பங்கேற்றார். டுவெயின் தற்போது நடிப்பிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்.

தொழில்முறை மல்யுத்தத்தில், ஜான்சன் மொத்தம் ஒன்பது முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார், அதில் ஏழு முறைகள் WWF/E சாம்பியன்ஷிப்பையும் (அவருடைய கடைசி வெற்றி WWE அங்கீகரிக்கப்படாத சாம்பியன் என்ற நிலையில் உள்ளது), இரண்டு முறை WCW/உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். இந்த சாம்பியன்ஷிப்களுடன், WWF இன்டர்கான்டினன்டல் சாம்பியன்ஷிப்பை இரண்டு முறையும் WWF டேக் டீம் சாம்பியன்ஷிப்பை ஐந்து முறைகளும் வென்றுள்ளார். WWF/E ட்ரிபிள் கிரவுன் என்பதன் ஆறாவது சாம்பியனாகவும், 2000 ராயல் ரம்பிளின் வெற்றியாளராகவும் ஜான்சன் திகழ்கிறார்.

ஜான்சன் ஒரு நடிகரும் ஆவார். அவர் 2001 ஆம் ஆண்டில், தி ஸ்கார்ப்பியன் கிங் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அதற்கு, முதல்முறையாக முதல் பட நடிகர்களின் சம்பளத்தில் அதிகபட்ச தொகையாக, $5.5 மில்லியன் சம்பளமாக பெற்றார். இதன் பின்னர், இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவை தி ரன்டவுன் , பி கூல் , வாக்கிங் டால் , கிரிடிரன் கேங் , தி கேம் பிளான் , கெட் ஸ்மார்ட் , ரேஸ் டூ விட்ச் மவுன்டைன் , பிளானட் 51 மற்றும் டூம் ஆகியனவாகும்.


History in English

Dwayne Douglas Johnson (born May 2, 1972), also known by his ring name The Rock, is an American actor, producer, retired professional wrestler, and former American football and Canadian football player. Regarded as one of the greatest professional wrestlers of all time, he wrestled for the World Wrestling Federation (WWF, now WWE) for eight years prior to pursuing an acting career. His films have grossed over $3.5 billion in North America and over $10.5 billion worldwide, making him one of the world's highest-grossing and highest-paid actors.

Johnson was a college football player at the University of Miami, with which he won a national championship in 1991. He aspired to have a professional career in football and entered the 1995 NFL Draft, but went undrafted. He signed with the Calgary Stampeders of the Canadian Football League (CFL), but was cut from the team in his first season. Shortly after, he began training as a professional wrestler.

An honorary member of the Anoa'i family, and the son of wrestler Rocky Johnson and grandson of Peter Maivia, Johnson secured a contract with the WWF in 1996. He rose to prominence after developing the gimmick of a charismatic, boastful, trash-talker. He won his first WWF Championship in 1998, becoming the promotion's first African-American and Samoan (through his mother) world champion. Johnson helped usher in the Attitude Era, an industry boom period in the late 1990s and early 2000s.

In 2004, he left the WWE to pursue an acting career. He returned in 2011 as a part-time performer until 2013, and made sporadic appearances until retiring in 2019. Johnson headlined the most-bought professional wrestling pay-per-view (WrestleMania XXVIII) and was featured among the most watched episodes of WWE's two flagship television shows (Raw and SmackDown). He is a 10-time world champion, a two-time Intercontinental Champion, a five-time Tag Team Champion, the 2000 Royal Rumble winner, and WWE's sixth Triple Crown champion.

Johnson's first leading film role was in The Scorpion King (2002). He has since starred in many successful films, including The Game Plan (2007), Tooth Fairy (2010), Journey 2: The Mysterious Island (2012), G.I. Joe: Retaliation (2013), Hercules (2014), San Andreas (2015), Central Intelligence (2016), Moana (2016), Rampage and Skyscraper (both 2018). His role as Luke Hobbs in the Fast & Furious films, beginning with Fast Five (2011), helped it become one of the highest-grossing film franchises. Johnson also stars in the Jumanji films, appearing in Jumanji: Welcome to the Jungle (2017) and Jumanji: The Next Level (2019).

Johnson produced and starred in the HBO series Ballers (2015–2019), which ran for five seasons and was ranked as HBO's most-watched comedy in six years.[20] He also stars and produces the autobiographical series Young Rock (2021). In 2000, Johnson released the autobiography The Rock Says, a New York Times bestseller. In 2012, he founded the entertainment production company Seven Bucks Productions.

In 2016 and 2019, Johnson made the Time 100 Most Influential People in the World list. He is the co-owner of the American football league, the XFL.

Popular posts from this blog

Steve Jobs (Past apple CEO)

Usain Bolt (Obstacle Racer)