Posts

Michael Jackson - (Dancer & Singer)

Image
Michael Jackson - (Dancer & Singer)    மைக்கல் ஜாக்சன் - (Dancer & Singer) வரலாறு தமிழில்   மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, ஆகத்து 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1964இல் இவரின் நான்கு உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். பின் 1971 இல் தனியாக பாடத் துவங்கி புகழடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த திரில்லர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் நடுவில் நாற்பது ஆண்டு காலமாகப் புகழ்பெற்றவராக வாழ்ந்து வந்துள்ளார். பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடைய

Dwayne Rock Johnson (Actor & Ex Wrestler)

Image
டுவெயின் டக்ளஸ் ஜான்சன் (தி ராக்) - (நடிகர்) Dwayne Douglas Johnson (The Rock) - (Actor) வரலாறு தமிழில்   டுவெயின் டக்ளஸ் ஜான்சன் (மே 2, 1972 -இல் பிறந்தவர்), என்னும் இவர் அவருடைய முன்னாள் ரிங் பெயரான தி ராக் என்பதால் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் தற்போது அமெரிக்காவில் நடிகராக உள்ளார். ஓய்வுப் பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரரும் ஆவார். ஜான்சன் கல்லூரி நிலை கால்பந்து வீரராக இருந்தார். 1991 -ஆம் ஆண்டில், அவர் மியாமி பல்கலைக்கழக தேசிய சாம்பியன்ஷிப் அணியில் பங்கேற்று இருந்தார். பின்னாளில் அவர் கனடிய கால்பந்து லீகில் கேல்கரி ஸ்டாம்ப்டர்ஸ் என்ற அணிக்காக விளையாடினார், ஆனால் அந்த சீசனில் இரண்டு மாதம் விளையாட்டில் சேர்க்கப்படாமல் இருந்தார். இந்த காரணத்தால், தன்னுடைய தாத்தா பீட்டர் மைவியா மற்றும் தனது தந்தை ராக்கி ஜான்சன் ஆகியோரைப் போல தானும் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரராக மாறுவது என்ற முடிவுக்கு வந்தார். ஒரு மல்யுத்த வீரராக வொர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மன்ட் (World Wrestling Entertainment - WWE) -இல் மிகவும் பிரபலமானார், இந்த அமைப்பு 1996 முதல் 2004 -ஆம் ஆண்டு வரை வொர்ல்ட் ரெஸ்லிங் ஃபெடரேஷன் (W

Usain Bolt (Obstacle Racer)

Image
Usain Bolt - (obstacles racer) உசைன் போல்ட் - (தடகள ஆட்டக்காரர்) வரலாறு தமிழில் உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பிறப்பு: ஆகத்து 21, 1986) யமேக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார். 2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாறும். இவரது விரைவோட்ட சாதனை

Bill Gates - (co-founder of Microsoft Corporation)

Image
Bill Gates - (co-founder of Microsoft Corporation) பில் கேட்ஸ் - (மைக்ரோசாப்ட் நிறுவனர்) வரலாறு தமிழில் வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்)   (English: William Henry Gates or Bill Gates) (பி.   அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட்   நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன்   தலைமை கணிப்பொறி மென்பொருள்   வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல்   அதிகாரியாகவும் (CEO)   பணியாற்றியுள்ளார். கோர்பிஸ்   நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது. சிறு வயது வாழ்க்கை வில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். இவரது தாய் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க் ச்ய்ச்டேமின் இயக்க

Steve Jobs (Past apple CEO)

Image
 Steve Jobs (Past apple CEO)   ஸ்டீவ் ஜொப்ஸ் (முன்னால் ஆப்பிள் நிறுவனத்தின் (CEO) வரலாறு தமிழில் ஸ்டீவ் ஜொப்ஸ் (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார். 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் திங்கள் அதிகாலை அவர் உயிரிழந்தார். ஸ்டீவ் ஜொப்ஸ், 1970களின் பிற்பகுதியில் ஸ்டீவ் வோசினியாக் (Steve Wozniak), மார்க் மார்குலா (Mi