Usain Bolt (Obstacle Racer)

Usain Bolt - (obstacles racer)

உசைன் போல்ட் - (தடகள ஆட்டக்காரர்)


வரலாறு தமிழில்

உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பிறப்பு: ஆகத்து 21, 1986) யமேக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார். 2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாறும்.

இவரது விரைவோட்ட சாதனைகள் இவருக்கு 'மின்னல் வேக போல்ட் (Lightning Bolt) என்ற ஊடகப் புனைப்பெயரையும்[5] தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கத்தின் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருது, தடகள செய்திகள் நிறுவனத்தின் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பன்முறை பெற்று தந்தன. ' Bolt' என்பதற்கு 'இடி' என்றும் ஆங்கிலத்தில் பொருள் பெறுவதால், இவரது புனைப்பெயர் 'இடி மின்னல்' என்று பொருள்படுமாறு வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உலகத் தடகள வீரர்களில் அதிகப்படியான வருமானம் ஈட்டும் வீரர் இவரே. 2013-ஆம் ஆண்டிற்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் பந்தயங்களின் 30 ஆண்டு வரலாற்றின் அதிக வெற்றிகளைக் பெற்ற தலைச் சிறந்த வீரர்களுள் ஒருவரானார்.

2017-ஆம் ஆண்டில் லண்டன் நடைபெறவிருக்கும் உலக வாகையாளர் போட்டிகளுக்குப் பிறகே போட்டிகளில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக போல்ட் தெரிவித்தார்.


History in English

Usain St Leo Bolt (born 21 August 1986) is a Jamaican retired sprinter, widely considered to be the greatest sprinter of all time. He is a world record holder in the 100 meters, 200 meters and 4 × 100 meters relay.

An eight-time Olympic gold medalist, Bolt is the only sprinter to win Olympic 100 m and 200 m titles at three consecutive Olympics (2008, 2012 and 2016). He also won two 4 × 100 relay gold medals. He gained worldwide fame for his double sprint victory in world record times at the 2008 Beijing Olympics, which made him the first person to hold both records since fully automatic time became mandatory.

An eleven-time World Champion, he won consecutive World Championship 100 m, 200 m and 4 × 100 meters relay gold medals from 2009 to 2015, with the exception of a 100 m false start in 2011. He is the most successful athlete of the World Championships. Bolt is the first athlete to win four World Championship titles in the 200 m and is one of the most successful in the 100 m with three titles.

Bolt improved upon his second 100 m world record of 9.69 with 9.58 seconds in 2009 – the biggest improvement since the start of electronic timing. He has twice broken the 200 meters world record, setting 19.30 in 2008 and 19.19 in 2009. He has helped Jamaica to three 4 × 100 meters relay world records, with the current record being 36.84 seconds set in 2012. Bolt's most successful event is the 200 m, with three Olympic and four World titles. The 2008 Olympics was his international debut over 100 m; he had earlier won numerous 200 m medals (including 2007 World Championship silver) and holds the world under-20 and world under-18 records for the event.

His achievements as a sprinter have earned him the media nickname "Lightning Bolt", and his awards include the IAAF World Athlete of the Year, Track & Field Athlete of the Year, BBC Overseas Sports Personality of the Year (three times) and Laureus World Sportsman of the Year (four times). Bolt retired after the 2017 World Championships, when he finished third in his last solo 100 m race, opted out of the 200 m, and pulled up in the 4×100 m relay final.

Popular posts from this blog

Dwayne Rock Johnson (Actor & Ex Wrestler)

Steve Jobs (Past apple CEO)